ETV Bharat / state

சாத்தான்குளம் சம்பவம்:அஞ்சலி செலுத்திய செல்போன் விற்பனையாளர் சங்கம்! - செல்போன் விற்பனையாளர் சங்கம்

நீலகிரி: தூத்துக்குடி சாத்தான்குளம் சம்பவத்தையொட்டி, குன்னூரில் செல்போன் மற்றும் ரீசார்ஜ் விற்பனையாளர்கள், கடைகளை அடைத்து, உயிரிழந்த தந்தை, மகனுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

Father, son die in prison - cell phone shop owners paying tribute

author img

By

Published : Jun 25, 2020, 2:58 AM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிளைச் சிறையில், காவலர்கள் தாக்கியதில் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உடல் நிலை மோசமடைந்து அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டுமென தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம், குன்னூரிலுள்ள செல்போன் மற்றும் ரீசார்ஜ் விற்பனையாளர்கள் தங்களது கடைகளை அடைத்து, உயிரிழந்த இருவரின் புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து, மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதில் குன்னூர் செல்போன் வியாபாரிகள் சங்கத் தலைவர் ரங்கராஜ், செயலாளர் ஆசிப், பொருளாளர் பாபு, குன்னூர் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.