ETV Bharat / state

தொடர் மழை: விளைநிலங்களில் தண்ணீர் தேங்குவதால் விவசாயிகள் கவலை! - nilgiris farmers affects

நீலகிரி: தொடர்ச்சியாக மழை பெய்வதால் விளைநிலங்களில் தேங்கும் தண்ணீர் விவசாயத்திற்கு இடையூறு அளிப்பதாக விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

விளைநிலங்களில் தேங்கும் தண்ணீர் தேங்குவதால் விவசாயிகள் கவலை!

author img

By

Published : Sep 3, 2020, 3:35 PM IST

நீலகிரி மாவட்டத்தில் ஏழாயிரம் ஹெக்டேரில் மலை காய்கறிகளான கேரட் உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. மாவட்டத்தில முத்தோரை பாலடா, கேத்தி பாலாடா, காட்டேரி வில்லேஜ், சேலாஸ், தூதூர் மட்டம், கொலக்கம்பை உள்ளிட்ட பல கிராமங்களில் காரட், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி, உருளைகிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக உதகையும் அதனை சுற்றி உள்ள கிராம பகுதிகளிலும் இரவு நேரங்களில் கன மழை பெய்வதும், பகலில் தூவானமாக இருப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் மலைகாய்கறிகளின் சாகுபடி பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக விவசாய நிலங்களில் தேங்கும் தண்ணீரால் கேரட் உள்ளிட்ட மலை காய்கறிகள் அழுகத் தொடங்கி உள்ளன.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ”கடந்த சில மாதங்களாக கேரட் விலை வீழ்ச்சி அடைந்திருந்தது. தற்போது நல்ல விலைக்கு விற்பனையாகிறது. ஆனால் மழையால் கேரட் அழுகுவதால் விற்க முடிவதில்லை. கடந்த மாதம் பெய்த கன மழையில் அறுவடை செய்த காய்கறிகள் பல வீணாகிவிட்டன.

விளைநிலங்களில் தேங்கும் தண்ணீர் தேங்குவதால் விவசாயிகள் கவலை!

அதுதவிர, உரம் மற்றும் விதைகள் அதிக பணம் கொடுத்து வாங்கவேண்டிய சூழல் நிலவுகிறது. இந்த போகத்தில் லாபம் பெறலாம் என முடிவு செய்திருந்த நிலையில், தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது” என்றார். தங்களின் நிலையறிந்து அரசு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:திருவாரூரில் விளைநிலங்கள் தரிசாக மாறும் அவலம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.