ETV Bharat / state

'பச்சை தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.30 விலை வழங்குக' - சிறு விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதப்போராட்டம்

நீலகிரி மாவட்டத்தில் விளையும் பச்சை தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் விலை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சிறு விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.

சிறு விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

author img

By

Published : Sep 14, 2022, 6:08 PM IST

நீலகிரி மாவட்டத்தில் விளையும் பச்சை தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் விலை வழங்க வேண்டும், உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள்களை நியாய விலைக்கடைகளிலும், ஆவின் பால் பூத்துகளிலும் விற்பனை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதியில் நடைபெற்றது

அரசு தேயிலை ஏல மையத்தில் விற்கப்படும் உற்பத்தி செய்த தேயிலைக்கு குறைந்தபட்சம் ரூபாய் 150-க்கு மேல் ஏலம் எடுக்க வேண்டுமென வியாபாரியிடம் வலியுறுத்த வேண்டும், மேலும் தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக்கடை, ஆவின் பால் பூத்துகளில், நீலகிரி தேயிலைத்தூள்களை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

பச்சை தேயிலைக்கு ஒரு கிலோவிற்கு குறைந்தபட்சம் 30 ரூபாயை விலை நிர்ணையம் செய்ய வேண்டும், கூட்டுப்பட்டாவில் விவசாய நிலங்கள் இருப்பதால் தங்களால் வங்கி சார்ந்த கடன் பெறுவதில் சிரமம் உள்ளதால் விவசாயி நிலங்களை அரசே உட்பிரிவு செய்து தனித்தனியாக பட்டா பாஸ் புக் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து காெண்டனர்.

சிறு விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்

இதையும் படிங்க: ஓய்வுபெற்ற என்ஆர்ஐக்களுக்கான பல்வேறு காப்பீட்டுத் திட்டங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.