ETV Bharat / state

2 மாதமாக அடைத்துவைக்கப்பட்டுள்ள ரிவால்டோ: அடுத்து என்ன செய்யலாம் என ஆய்வு - Rivaldo elephant

65 நாள்களாக கூண்டில் அடைத்துவைக்கப்பட்டுள்ள காட்டு யானை ரிவால்டோவை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுசெல்வதா அல்லது வனப்பகுதியில் விடுவதா என்பது குறித்து வல்லுநர் குழுவினர் நேரில் ஆய்வுசெய்தனர்.

ரிவால்டோ யானை
ரிவால்டோ யானை
author img

By

Published : Jul 10, 2021, 9:51 PM IST

நீலகிரி: உதகை அருகே மரக்கூண்டில் கடந்த 65 நாள்களாக அடைத்துவைக்கப்பட்டுள்ள காட்டு யானை ரிவால்டோவை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுசெல்வதா அல்லது வனப்பகுதியில் விடுவதா என்பதை முடிவுசெய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவினர் இன்று (ஜூலை 10) நேரில் ஆய்வுசெய்தனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட வாழைத்தோட்டம், மாவனல்லா பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ரிவால்டோ சுற்றித் திரிந்துள்ளது. தும்பிக்கையில் ஏற்பட்ட காயம், கண்பார்வை குறைவு காரணமாக வனப்பகுதிக்குள் செல்லாமல் அந்த யானை அதிக நேரம் குடியிருப்புப் பகுதிக்குள்ளேயே நடமாடியதுடன், வேளாண் நிலத்தில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தியும் வந்தது.

65 நாட்களாக கூண்டில் அடைத்து வைக்கப்பட்ட ரிவால்டோ யானை
65 நாள்களாக கூண்டில் அடைத்துவைக்கப்பட்ட ரிவால்டோ யானை
இதனையடுத்து, அந்த யானையைப் பிடிக்குமாறு அப்பகுதி மக்கள் முதுமலைப் புலிகள் காப்பக நிர்வாகத்திற்கு கோரிக்கைவிடுத்தனர். இதனையடுத்து ரிவால்டோ யானை வாழைத்தோட்டம் பகுதியில் அமைக்கப்பட்ட மரக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது.
நிபுணர் குழுவினர் நேரில்  ஆய்வு
வல்லுநர் குழுவினர் நேரில் ஆய்வு

65 நாள்களுக்கு மேலாக அந்த யானைக்கு மருத்துவம் அளிக்கப்பட்டுவரும் நிலையில் ரிவால்டோ யானையின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்யவும், வனப்பகுதியில் விடுவதா அல்லது முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு அழைத்துச் சென்று பராமரிப்பதா என்பது குறித்து முடிவுசெய்யவும் எட்டு பேர் கொண்ட வல்லுநர் குழு ஒன்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வன கால்நடை முன்னாள் உதவி இயக்குநர் மனோகரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் நீலகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், யானை வல்லுநர்கள், வன உயிரியல் துறை பேராசிரியர் உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட இந்தக் குழு ரிவால்டோ யானையை இன்று மாலை நேரில் ஆய்வுசெய்தது.

நிபுணர் குழுவினர்
வல்லுநர் குழுவினர்

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் தலைவர் மனோகரன், "65 நாள்களாக மரக்கூண்டில் அடைத்துவைக்கப்பட்டு மருத்துவம் அளிக்கப்பட்டுவரும் ரிவால்டோவை ஆய்வுசெய்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: கொங்கு நாட்டுக்கு குறி: திமுகவில் ஐக்கியமாகும் தோப்பு வெங்கடாசலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.