நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் யூகலிப்டஸ் தைலம் தயாரித்து வருகின்றனர். பொதுவாக ஆண்டுதோறும் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் யூகலிப்டஸ் தைலத்தை அதிகளவில் வாங்கிச் செல்வது வழக்கம்.
இதனால் இந்த தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில், கரோனா பாதிப்புக் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தொழில் முடங்கியுள்ளதால் போதிய வருமானமின்றியும், உணவு இன்றியும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து யூகலிப்டஸ் தைலம் தொழிலாளர்கள் கூறுகையில் ”அரசு, தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கவேண்டும், யூகலிப்டஸ் தைலத்தை நேரடியாக சந்தைப்பபடுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட கரோனா!