நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையைக் கடந்து யானைகள் வடுகன் தோட்டம், இச்சி மரம், மரப்பாலம், குறும்பாடி ஆகிய பகுதிகளுக்குச் செல்வது வழக்கம். யானைகள் கடக்கும் பாதையில் சாலையோரத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது.
தடுப்புச்சுவர் அமைத்தால் யானைகள் ஊருக்குள் படையெடுக்கும் இடர் இருப்பதைச் சுட்டிக்காட்டி நமது ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டது.
இந்தச் செய்தியின் எதிரொலியாக யானைகள் வழித்தடத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தற்போது கைவிடப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் வனத் துறையினர் சார்பில் அறிவிப்பு பலகை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
அதில், இது யானைகள் சாலையை கடக்கும் பகுதியென்றும் வாகனங்கள் மெதுவாகச் செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் யானை வழித்தடம் அழிப்பு!