ETV Bharat / state

வால் பகுதியில் காயம்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த யானை உயிரிழப்பு! - யானை உயிரிழப்பு

கூடலூரில் வால் பகுதியில் காயத்துடன் பிடிபட்ட காட்டு யானை சிகிச்சைப் பெற்றவந்த நிலையில் நேற்று (ஜூலை 9) உயிரிழந்தது.

யானை உயிரிழப்பு
யானை உயிரிழப்பு
author img

By

Published : Jul 10, 2021, 7:14 AM IST

Updated : Jul 10, 2021, 10:07 AM IST

நீலகிரி: கூடலூர் வனப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆண் யானை ஒன்று வாலில் காயத்துடன் அவதிபட்டு வந்தது. இதனையறிந்த வனத் துறையினர், கடந்த ஜூன் 16ஆம் தேதியன்று , கும்கி யானைகள் உதவியுடன் காயம்பட்ட யானையை பிடித்தனர்.

பின்னர், யானைகள் முகாமில் அமைக்கப்பட்ட கராலில் அடைத்து சிகிச்சையளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று யானைக்கு காய்ச்சல் வந்து, காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, யானைக்குத் தீவிர சிகிச்சையளித்து வந்த நிலையில் இரவு 7:30 மணிக்கு சிகிச்சைப் பலனின்று யானை உயிரிந்தது. இன்று (ஜூலை 10) காலை உடற்கூராய்வு நடைபெறவுள்ளதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: யானைகளுக்கு ஹெர்ப்பீஸ் வைரஸ் தாக்கம் இல்லை - வனத்துறையினர் தகவல்

Last Updated : Jul 10, 2021, 10:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.