நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள ஓடக்கூலி பகுதியில் வசிப்பவர் சந்திரன். மாற்றுத்திறனாளியான இவர் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது கிராமத்துக்குள் வந்த ஒற்றை யானை, அவரது வீட்டை உடைத்து தரைமட்டமாக்கியுள்ளது.
இதனையறிந்த பொதுமக்கள், உடனடியாக தீ மூட்டியும் சத்தங்கள் எழுப்பியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதையடுத்து, வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் பலத்த காயங்களுடன் சிக்கித் தவித்த சந்திரனை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "தொடர்ச்சியாக இந்த ஒற்றை யானை விவசாயப் பயிர்களை சேதப்படுத்துவது, வீடுகளை உடைப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறது. இதுகுறித்து வனத்துறையினருக்கு பலமுறை தகவல் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, யானை தொடர்ந்து கிராமத்துக்கு வருவதைத் தடுப்பதற்கு உடனடியாக கிராமங்களைச் சுற்றி அகழி கால்வாய், மின்வேலி அமைக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்!