உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்ளிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அம்மாவட்ட தேர்தல் அலுவலர் இன்னசென்ட் திவ்யா அனைத்து கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.
அதில், மொத்த ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 899, மொத்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 87 ஆயிரத்து 787, இதர வாக்களர்களின் எண்ணிக்கை ஏழு.
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 57 ஆயிரத்து 693. மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 788, மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 790 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: 'கீழடியின் பழமையான நாகரிகம் வியப்பைத்தருகிறது'- அமெரிக்க பயணிகள்