நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆட்டோ ஓட்டுநர் நூருதீன் என்பவர் குடும்பத்துடன் மனு அளிக்கவந்தார்.
அப்போது தொழிலதிபர் சாதிக் என்பவரிடம் தான் ஆட்டோ வாங்கியதற்கான தொகையை செலுத்திவிட்டதாகவும், ஆனால் சாதிக் தன்னிடம் ஆவணங்களைத் தராமல் மோசடியில் ஈடுபடுவதாகவும் நூருதீன் குற்றஞ்சாட்டினார்.
திடீரென அவர் குடும்பத்துடன் தான் மறைத்துவைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
உடனே அங்கிருந்த காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர். மேலும் அவரிடம் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.
இதையும் படிங்க: காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இளைஞர்