நீலகிரி: தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கடந்த நவம்பர் 11 ஆம் தேதி கரையைக் கடந்தது.
இந்நிலையில், வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நவ.13) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நவம்பர் 16ம் தேதி வரை பொதுமக்கள் நீலகிரிக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி