நீலகிரி: உதகை நகராட்சி 36 வார்டுகளைக் கொண்டது. இந்த 36 வார்டுகளுகளின் கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் வாக்குகள் நேற்று (பிப் 22) எண்ணப்பட்டன. இந்நிலையில் 20 இடங்களில் திமுக அமோக வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உதகை நகராட்சியைக் கைப்பற்றியது.
வெற்றி பெற்ற திமுகவினர் இன்று (பிப் 23) வனத்துறை அமைச்சர் ராமசந்திரனிடம் வாழ்த்து பெற்று, உதகை நகரில் ஊர்வலமாக வந்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தனர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக, தனிப்பெரும் கட்சியாக உதகை மாவட்டத்தை உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளையும் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுக கூட்டணி தோல்வி தற்காலிகமானது: ஜி.கே.வாசன்