கரோனா தொற்று பரவலைத் தடுக்கும்விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் ஏராளமானோர் வாழ்வாதாரமின்றி தவித்துவருகின்றனர். குறிப்பாக நீலகிரி மாவட்ட மக்கள் வேலையை இழந்து சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் டெல்லி சென்று திரும்ப முடியாமல் தவித்துவரும் திமுக மக்களவை உறுப்பினர் ஆ. ராசா உதகை, கூடலூர், கோத்தகிரி ஆகிய மூன்று பகுதிகளிலுள்ள குடும்பங்களுக்கு 30 டன் அரிசி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும், நீலகிரி மக்களவைத் தொகுதி முழுவதும் உள்ள மக்களுக்கு 80 டன் அரிசி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ அரிசி வீதம் முதற்கட்டமாக 30 டன் அரிசி வழங்கும் பணி தொடங்கப்பட்டது. இதனை ஆ. ராசாவின் சார்பில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், கூடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் திராவிடமணி உள்ளிடோர் வழங்கினர்.
இதையும் படிங்க: திமுக சார்பில் 650 குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான நிவாரணம்!