நீலகிரி: குன்னுார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டெருமை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல வன விலங்குகள் உள்ளன. சமீபகாலமாக உணவு, தண்ணீரை தேடி தேயிலை தோட்டம், நகர் பகுதிகளுக்குள் வந்து செல்கின்றன.
இந்நிலையில், குன்னூர் தீயணைப்பு நிலையம் அருகேவுள்ள புதர் பகுதிக்குள் புள்ளிமான் ஒன்று வந்துள்ளது. இந்தப் புள்ளி மானை சமூக விரோதிகள் சிலர் வேட்டையாட வாய்ப்புள்ளது.
இதனால், வனத் துறையினர் மானை மீட்டு வனப்பகுதிக்குள் விட வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள், அப்பகுதி மக்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் மான் வேட்டைக்கு சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு