நீலகிரி மாவட்டம், குன்னூர்ப் பகுதியில் பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளது. இதனால் சுற்று வட்டார பகுதிகளான பர்லியாறு, மரப்பாலம், கே.என்.ஆர் போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான தோட்டங்களில் ஏராளமான பலா பழங்கள் விளைச்சல் அடைந்துள்ளன.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக, மலைப்பாதையில் எல்லைகள் மூடப்பட்டதால் பழங்களை விற்பனைக்குக் கொண்டு செல்ல முடியாமல், விவசாயிகள் மரத்திலேயே விட்டு விடுகின்றனர்.
இதனால் சமவெளிப் பகுதிகளிலிருந்து குன்னூருக்கு வந்து யானைக்கூட்டங்கள் முகாமிட்டுள்ளன.
அங்கு உள்ள தோட்டங்களில் யானைகள் 16 அடி உயரத்தில், பழங்கள் இருந்தாலும் சர்வ சாதாரணமாக மரங்களில் ஏறி, பறித்து உண்டு வருகின்றன. இதனால் விவசாயிகளுக்குப் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.