தமிழ்நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் தற்போது பாதித்தவர்களைவிட சிகிச்சை பெற்று திரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
நீலகிரி மாவட்டத்திலும் தொற்று பாதித்தவர்களைவிட சிகிச்சை பெற்று வீடுகளுக்கு அதிகம் பேர் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், நீலகிரிக்குள் உள்ளூர் மக்கள் மட்டுமே பஸ்களில் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இவ்வாறு பஸ்களில் வரும் உள்ளூர் பயணிகளுக்கும் காட்டேரி அருகில் கரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத நிலையில் இங்கு மட்டுமே பஸ்களில் வரும் உள்ளூர் பயணிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்வது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பரிசோதனைக்காக உள்ளூர் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து செல்லும் அவலம் ஏற்படுகிறது.
அரசு பஸ்களில் வரும் உள்ளூர் பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை - அரசு பேருந்து பயணிகளுக்கு கரோனா பரிசோதனை
நீலகிரி: அரசு பஸ்களில் வரும் உள்ளூர் பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்வதால் உள்ளூர் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.