கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
இதில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, வணிக வளாகம், திரையரங்குகள், கேளிக்கை நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் உள்பட பல நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார், அதில், "முதலமைச்சர் அறிவித்தது போல பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் சுற்றுலாத் தலங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என தெரிவித்தார்.
மேலும், கோயில்கள், மசூதிகள், தேவலாயங்களில் கூடும் கூட்டங்களில் தடுப்பு நடடிவக்கை, ஊர் விழாக்களை தவிர்ப்பது குறித்து நாளை ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யபட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 'பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது பொருளாதார குற்றம்' - அழகிரி