நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களுக்கு அரசு சார்பாகவும், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் 225 தூய்மைப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு வழங்கினார். தமிழ்நாடு அரசின் கோவிட் 19 நிதியில் இருந்து 12 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட டிராக்டரில், தானியங்கிக் கிருமி நாசினி இயந்திரத்தை இயக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
குன்னூர் நகராட்சியின் முப்பது வார்டுகளிலும், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் மருந்து தெளிக்கும் பணியைத் தீவிரமாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க: சீனாவின் இழப்பு, இந்தியாவுக்கு ஆதாயமா?