நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த புத்தூர் வயல்பாடி பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 5 வயது முதல் 13 வயதுக்குள்பட்ட 10 குழந்தைகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையறிந்து சுகாதாரத்துறை நகராட்சி ஆணையர் பாஸ்கரன், அப்பகுதிக்கு சென்று கிருமிநாசினி தெளிக்கவும் குழந்தைகளை சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து செல்ல அலுவலர்களுடன் சென்றார். இந்நிலையில், அலுவலர்கள் தங்கள் பகுதிக்கு வரவேண்டாம் எனவும் தங்கள் குழந்தைகளுக்கு எதுவும் இல்லை எனவும் கூறி அப்பகுதி மக்கள் அலுவலர்களை ஊருக்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து கூடலூர் டிஎஸ்பி சசிகுமார், காவல்துறை அலுவலர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருப்பினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.
இது குறித்து அலுவலர்கள் கூறுகையில், “நாங்கள் தொற்று பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை ஏற்பாடு செய்வதற்காக அங்கு சென்றோம். ஆனால் அப்பகுதி மக்கள் எங்களை அங்கு வரவிடாமல் கம்பிகளை வைத்து தடுத்துள்ளனர். மேலும் எங்களை மிரட்டும்தொனியில் இருந்தனர். இதனால் சற்று பயத்துடன் திரும்பினோம்” என்றனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசிக்குப் பயந்து ஓடிய பழங்குடியினர்!