நீலகிரி மாவட்டம் குன்னூரில் மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் உள்ளது. இந்த கன்டோன்மென்ட் வாரியத்தின்கீழ் ஏழு வார்டுகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகின்றனர். இந்நிலையில் கன்டோன்மென்ட் நிர்வாகத்தில் பணிபுரியும் மூன்று ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொண்டுவருகின்றனர். இதனால் கன்டோன்மென்ட் நிர்வாக அலுவலகம் மறு உத்தரவு தெரிவிக்கும்வரை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
கன்டோன்மென்ட் ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், சுகாதாரப் பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இதனால் கன்டோன்மென்ட் பகுதி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: முழு ஊரடங்கால் இரவு உணவிற்கு சிரமம்: அத்தியாவசிய பணியாளர்கள்!