குன்னூரில் இயங்கிவரும் கிளீன் குன்னூர் அமைப்பு சார்பாக ஆறு தூர்வாரும் பணி நடைபெற்றுவருகிறது. இப்பணியில் எடுக்கப்பட்ட மண், குப்பைகளை குப்பைக்குழிகளில் கொட்டி அதன் மேற்புறம் புற்கள் வளர்க்கப்பட்டு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.
குன்னூர் நகராட்சி நிர்வாகம், கிளீன் குன்னூர் அமைப்பின் சார்பாக குப்பைக்கூளம் மேலாண்மை பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமையேற்ற நீலகிரி மாவட்ட ஆட்சியர், நெகிழிக் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தை தொடங்கிவைத்தார்.
பின்னர் பேசுகையில், "இந்தத் திட்டம் உள்பட குன்னூரில் பல்வேறு குப்பை மேலாண்மை திட்டங்களுக்காக 40 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையை வழங்கிய ஹைதராபாத் தொழிலதிபருக்கும் இந்தப் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் கிளீன் குன்னூர் அமைப்பினருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: அறந்தாங்கியில் கனமழைக்கு வீடுகள் இடிந்து விழுந்து சேதம்!