ETV Bharat / state

குன்னூரில் மூன்று மடங்கு காய்கறி விலை - மாவட்ட அலுவலர்கள் திடீர் ஆய்வு - Coonoor Market

நீலகிரி: குன்னூர் மார்க்கெட் கடைகளில் மூன்று மடங்கு விலை அதிகமாக காய்கறி விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரை அடுத்து மாவட்ட அலுவலர்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

மாவட்ட அலுவலர்கள் திடீர் ஆய்வு
மாவட்ட அலுவலர்கள் திடீர் ஆய்வு
author img

By

Published : Mar 25, 2020, 7:30 PM IST

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பால், காய்கறி, இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்ய எவ்விதமான கட்டுபாடும் விதிக்கப்படாத நிலையில் பொதுமக்கள் தங்களது தேவைகளுக்கு ஏற்ப கூட்டம் சேராமல் காய்கறி போன்ற அத்தியாவசிய பொருள்களை வாங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குன்னூர் மார்க்கெட் பகுதியில் உள்ள காய்கறி கடைகளில், உழவர் சந்தையின் விலைப் பட்டியலை விட மூன்று மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டதால் வருவாய் துறையினர், துணை வட்டாட்சியர், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காய்கறிகள் அதிகமான விலைக்கு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது.

மாவட்ட அலுவலர்கள் திடீர் ஆய்வு

இதனைத் தொடர்ந்து அனைத்து கடைகளிலும் கட்டாயம் விலைப் பட்டியலை பொது மக்கள் அறிந்துக்கொள்ளும் வகைகள் அமைக்க வேண்டும், கடை வியாபாரிகள் முகக் கவசங்கள், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும் என அலுவலர்கள் உத்தரவிட்டனர். இதனை மீறும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தனர்.

இதையும் படிங்க: சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு 4 மாத ஊதியம் முன்பே வழங்கப்படும் - ஒடிசா முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.