நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்கள் உள்ளன. இதில் சின்ன குரும்பாடி ஆட்டுக்கல் கிராமத்தில் 16 குடும்பங்கள் உள்ளன.
தற்போது கரோனா தீநுண்மி பாதிப்புக் காரணமாக பல்வேறு கிராமங்களில் வெளியிடங்களிலிருந்து மக்கள் வருவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வெளியிடங்களிலிருந்து மக்கள் வருவதைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் நிவாரணப் பொருள்கள் கொண்டுவருபவர்கள் சாலையிலிருந்து பழங்குடியின மக்களுக்கு வழங்கிவருகின்றனர்.
மேலும், கரோனா சமூகப் பரவல் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு தற்போது பழங்குடியின மக்களிடையேயும் ஏற்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டியது.
இதையும் படிங்க:சென்னையிலிருந்து ஏப்ரலில் மட்டும் 5,489 வெளி நாட்டினர் நாடு திரும்பியுள்ளனர்.