நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் கடந்த ஒருவாரக் காலமாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மலை ரயில் பாதையிலும் ஆங்கங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் சீரமைப்பு பணிகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டுகிறது. எனவே தொடர் கனமழை காரணமாக ரயில் பாதையை சீரமைப்பதற்காக இன்று தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு (ஆகஸ்ட் 11, 12, 13) மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான மலைரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.