கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பெட்போர்டு சுற்றுலா வாகன ஓட்டிகள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
இதனால் அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, காய்கறி பேன்ற பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, பாதிப்படைந்த சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம், சுற்றுலா வாகன ஓட்டுநர் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், குன்னூர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிவாரண தொகையை தமிழ்நாடு அரசு தங்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வீட்டு வாடகைக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது: திருச்சி டிஐஜி எச்சரிக்கை