ஆர்.எஸ்.எஸ் தொடக்க தினத்தையொட்டி, நாடு முழுவதும் சீருடை அணிந்த தொண்டர்கள் அணிவகுப்பு நடத்துவது வழக்கம். ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகர் தினம், தமிழகத்தில் சங்கம் தொடங்கி 80 ஆண்டுகள் நிறைவு விழா, நேதாஜியின் ஆசாத்ஹிந்த் இயக்க நூற்றாண்டு விழா, காந்தியின் 150ஆவது ஆண்டு ஜெயந்தி விழா என நான்கு விழாக்களையும் ஒன்றாக இணைத்து நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று நடத்தப்பட்டது.
முதல்நிகழ்ச்சியாக மதியம் 2 மணிக்கு ஊா்வலம் தொடங்கியது. ஊா்வலத்தை சுவாமி ஜீவன் முக்தானந்தா சரஸ்வதி தொடங்கி வைத்தாா். சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சிம்ஸ் பூங்கா, பெட்போர்டு, ப்ளூ ஹில்ஸ், ஒய்.எம்.சி.ஏ, லாலி மருத்துவமனை வளைவு, மவுண்ட் ரோடு பேருந்து நிலையம், டிடிகே ரோடு வழியாக பழைய லாரி நிறுத்தத்தை வந்தடைந்தனா். அதன் பிறகு பொதுவிழா நடத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆா்.எஸ்.எஸ் தொண்டா்கள் கலந்து கொண்டனா். இந்த ஊா்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதையும் படிக்க :கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் - களத்தில் இறங்கிய பல்கலை மாணவர்கள்!