ETV Bharat / state

கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்ட குன்னூர் மக்கள்! - நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரி: குன்னூர் மாணிக்கம் பிள்ளை தோட்டப்பகுதி மக்கள் டான் டீ நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.

குன்னூர் பகுதி மக்கள்
குன்னூர் பகுதி மக்கள்
author img

By

Published : Aug 6, 2020, 6:11 PM IST

குன்னூர் வண்ணாரப்பேட்டை அருகே உள்ள மாணிக்கம் பிள்ளை தோட்டப் பகுதியில் 200 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு அமைந்துள்ள 'டான் டீ' குடியிருப்புப் பாதை வழியாகக் கடந்த 1938ஆம் ஆண்டு முதல் மக்கள் சென்று வந்தனர்.

இதற்கிடையில் கரோனா பாதிப்பு காரணமாக, வண்ணாரப்பேட்டையில் சீல் வைக்கப்பட்ட அனைத்து இடங்களும் திறக்கப்பட்ட நிலையில், 'டான் டீ பகுதி' மட்டும் திறக்கப்படவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள், 'டான் டீ' பகுதியைத் திறக்குமாறு நிர்வாக இயக்குநருக்கு மனு கொடுத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இன்று (ஆகஸ்ட் 6) கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் 'டான் டீ' தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர்.

இருப்பினும் நிர்வாகத்தினர் மக்களிடம் பேச்சுவார்த்தைக்கு முன்வராததால், மக்கள் கொட்டும் மழையில் சுமார் 1 மணி நேரம் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.