நீலகிாி மாவட்டம் குன்னுாா் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்றிரவு விடிய விடிய கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக ஊட்டி மலைரயில் வெலிங்டன் அருகே ராட்சத மரம் ஒன்று தண்டவாளத்தில் விழுந்தது.
இதனால் இன்று காலை குன்னூரிலிருந்து ஊட்டிக்கு சென்ற மலைரயில் வெலிங்டன் அருகே நிறுத்தப்பட்டு ரயில்வேதுறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியா்கள் ராட்சத மரத்தை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினா். இதனால் மலைரயில் ஒரு மணிநேரம் தாமதமாக ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது.
இதையும் படிங்க:
தொடர் விடுமுறை எதிரொலி - குளிர் நகரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!