நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் சமீபகாலமாக காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகாித்துள்ளது. உணவு, தண்ணீருக்காக அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளை நோக்கி படையெடுக்கிறது.
இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் லில்லியட்டி கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் காட்டெருமை ஒன்று நேற்றிரவு விழுந்துள்ளது.
இன்று காலை அவ்வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து வனத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் காட்டெருமையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது காட்டெருமை மிகவும் சோர்வாக காணப்பட்டது. இதை பார்த்த மக்கள் காட்டெருமையை மீட்டு விரைந்து சிகிச்சை அளிக்க வேண்டுமென வனத் துறையினரிடம் கூறியுள்ளனர்.
ஆனால் வனத்துறையிர் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் காட்டெருமை இறந்தது. இச்சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:
காட்டெருமையால் அரண்டு ஓடும் மக்கள் - வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!