நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் மண்சரிவு, மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்துள்ளது.
மேலும், மலை ரயில் பாதையில் ராட்சத பாறைகளும், மரங்களும் விழுந்துள்ளதால், அவற்றை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில்வே ஊழியர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து, ரயில் பாதையில் விழுந்துள்ள பாறைகள், மரங்களை அகற்றும் பணிக்காக மூன்று நாட்கள் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ரயில் பயணம் மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: