நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் பல்வேறு குடியிருப்புகள், சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குன்னூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதில் ஐந்து வாகனங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஏழு வாகனங்கள் எங்கு இருக்கிறது என தெரியாமல் உள்ளது. மேலும், அந்த பகுதிக்கு மருத்துவ உதவி, நிவாரண நிதி ஏதும் வழங்கவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்த தகவலறிந்து அப்பகுதிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, குடியிருப்புகளை ஆய்வு செய்தார். இந்த பகுதிகளில் விரைவில் புதிய பாலங்கள், தடுப்புச் சுவர்கள் அமைத்து தரப்படும் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் குறை தீர்ப்பு திட்டத்தின் கீழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்!