ETV Bharat / state

ஹெலிகாப்டர் விபத்து: வீரர்களை மீட்க உதவிய கிராம மக்களுக்கு டிஜிபி பாராட்டு - ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தின்போது வீரர்களை மீட்க உதவி செய்த நஞ்சப்ப சத்திரம் கிராம மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டுத் தெரிவித்தார்.

கிராம மக்களுக்கு டிஜிபி நன்றி
கிராம மக்களுக்கு டிஜிபி நன்றி
author img

By

Published : Dec 10, 2021, 4:19 PM IST

நீலகிரி: வெலிங்டன் ராணுவ முகாமில் நடக்கவிருந்த நிகழ்ச்சிக்கு முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் வந்த ஹெலிகாப்டர், குன்னூர் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது.

இதில் பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட வீரர் ஒருவருக்கு பெங்களூருவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்த விபத்தின்போது நஞ்சப்ப சத்திரம் மக்கள், தீயணைப்பு மற்றும் காவல் துறையினருடன் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு நஞ்சப்ப சத்திரம் மக்களைச் சந்தித்து, அவர்களின் சேவையைப் பாராட்டினார்.

கிராம மக்களுக்கு டிஜிபி நன்றி

பின்னர் செய்தியாளரிடம் அவர் கூறியதாவது, "ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டபோது, இப்பகுதி மக்கள் உரிய நேரத்தில் தீயணைப்பு, காவல் துறைக்குத் தகவல் அளித்தனர். தங்கள் வீடுகளிலிருந்து போர்வைகள், பொருள்களைக் கொண்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

அவர்களது சேவை பாராட்டத்தக்கது. இதனால், அவர்களுக்கு குன்னூர் சார் ஆட்சியர், காவல் துறை சார்பில் கம்பளிகள் வழங்கப்பட்டன. முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் வெலிங்டன் ராணுவ முகாமுக்கு வருகிறார் என்பதால், மாவட்டம் முழுவதுமே பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது.

அவரது பயணம் வான்வழிப் பயணம் என்றாலும், சாலைகளில் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், தீவிர கண்காணிப்புப் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுவந்தனர்.

விபத்து தொடர்பாக மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கம் தலைமையில் விசாரணை நடந்துவருகிறது. இதுவரை 26 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: வீடியோ எடுத்தவர்களின் பரபரப்பு பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.