நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் பேருந்து நிலையம் பல சாலைகள் சந்திக்கும் இடத்தில் உள்ளது. இங்கு நாள்தோறும் பல வாகனங்கள் சென்று வருகிறது.
மேலும், கரோனா பாதிப்பினால் வெறிச்சோடி காணப்பட்ட இந்த சாலை தற்போது, கடைகள் திறக்கப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதனால், வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாமல் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படுகிறது. நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த பேருந்து நிலையத்தில் நிறுத்தும் வாகனங்களுக்கு திடீரென கட்டணம வசூலிப்பதால் வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும், பாலம் பகுதியில் பார்க்கிங் டெண்டர் எடுத்தவர், பேருந்து நிலையத்தில் கட்டணம் வசூலிப்பதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இங்கு, ஒரு மணி நேரத்திற்கு 40 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.