தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்புப் பகுதிக்கு வருவது தொடர்கிறது.
இந்நிலையில், வனத்தையொட்டியுள்ள நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்துவருகின்றன. உணவு, தண்ணீரைத் தேடி வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் வருகின்றன.
இதேபோல், குன்னூர் சிம்ஸ் பார்க் குடியிருப்புப் பகுதியில் ஒற்றை காட்டெருமை வலம்வந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே வனத் துறையினர் அந்த ஒற்றை காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:மக்களை அச்சுறுத்தும் காட்டெருமை