நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள அட்டடி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதைச்சுற்றி அடர்ந்த வனப்பகுதி, தேயிலைத் தோட்டம் உள்ளது சமீப காலமாக இப்பகுதியில் சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்றவைகள் பகல் நேரங்களில் குடியிருப்புப் பகுதிக்கு வந்து செல்கிறது. இதன் காரணமாக வளர்ப்பு கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்திவந்தனர்.
அப்பகுதியில் சின்னப்பன் என்பவர் சொந்தமாக தேன் கூண்டுகள் வைத்து தேன் சேகரித்து வந்துள்ளார். இந்நிலையில், வனப்பகுதில் இருந்து வந்த கரடி ஒன்று, அங்கிருந்த பத்திற்கும் மேற்பட்ட தேன் கூண்டுகளை உடைத்து நாசம் செய்து அதில் இருந்த தேனை குடித்துவிட்டு சென்றுள்ளது. இதனை அறிந்த சின்னப்பனும், அப்பகுதி மக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
மேலும், இதுகுறித்து வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், விரைவில் அந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரடி தாக்கி ஒருவர் பலி; பாதுகாப்பு வேண்டி மக்கள் போராட்டம்!