நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம்கட்ட சீசன் ஆரம்பமாகும் நிலையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது குறிப்பாக குன்னூர் சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ், காட்டேரி பூங்கா போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவு இருக்கிறது.
மேட்டுப்பாளையம் குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காட்டேரி பூங்காவில் சால்வியா, டேலியா, லில்லியம், மேரிகோல்ட் போன்ற மலர் செடிகள் கண்களுக்கு விருந்து அளிப்பதாக உள்ளது. அதனைக் காண வெளிநாடு, வெளி மாநில சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளும் வருகை தருகின்றனர்.
மேலும், இரண்டாம் கட்ட சீசனுக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : காவல்துறை மெகா ஊழலில் நடவடிக்கை தேவை - மு.க. ஸ்டாலின்