நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டும், மரங்கள் விழுந்தும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலத்த மழை, சூறாவளி காற்று வீசும்போது, வெலிங்டன் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருக்கும் பழமைவாய்ந்த ராட்சத மரங்களின் கிளைகள் முறிந்து விழுவது வாடிக்கையாக உள்ளது. மேலும் வேரோடு சாய்ந்து விழுந்த மரங்களால் மின் கம்பங்கள், ஒயர்கள் அறுந்துவிடுவதால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தும், இதுவரை அவை அகற்றப்படாவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் மரங்கள் நடுவே செல்லும் மின் கம்பங்களில் சூறாவளி காற்று வீசும்போது கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுவதினால் மின்தடை ஏற்படுகிறது என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மின் தடையால் பள்ளி மாணவர்கள் தேர்வுக்கு படிக்க முடியாமல், சிரமம்பட்டுவருவதாகவும், எனவே மழை பெய்யும் போது அரசு அலுவலர்கள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க: ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை - மக்கள் ஓட்டம்!