சென்னை: உதகையில் அரசு சேட் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நீலகிரி மாவட்டத்தில், உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவு ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் இருக்கின்றன.
கரோனா தொற்று காலத்தை சமாளிக்கும் அளவு அங்கு ஆக்ஸிஜன் இருப்பு உள்ளது. மேலும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வருபவர்கள் இ-பாஸ் கட்டாயம் வைத்திருக்கவேண்டும். தமிழ்நாடு அரசின் அனுமதி கிடைத்தவுடன் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: தன்னார்வலரின் முயற்சி: நீலகிரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்