ETV Bharat / state

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு! - தேர்தல் குறித்து ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

author img

By

Published : Mar 10, 2021, 7:50 AM IST

நீலகிரி: தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. நீலகிரியில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று தொகுதிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன. அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேவையான வசதிகளை உறுதி செய்திட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையமாக அரசு பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதில் வாக்கு எண்ணிக்கைக்கான அறைகள், மேஜைகள், முகவர்கள் வந்து செல்லும் வழிகள், வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கும் அறைகள், வாக்கு எண்ணிக்கை மையத்தின் உள் நுழையும், வெளியேறும் வழிகள் ஆகிய முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டிருக்கிறதா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், உதவி ஆட்சியர்கள் மோனிகா ராணா, ரஞ்சித்குமார் ஆகியோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.

இதையும் படிங்க : 17 வருடங்களுக்கு பின்னர் ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.