நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் அவ்வப்போது கரடிகள் வந்து சென்றன.
சமீப காலமாக குன்னூரில் உள்ள தேயிலை தோட்டம், குடியிருப்புகளில் அடிக்கடி கரடி வந்து செல்கிறது.
இரண்டு நாள்களுக்கு முன்பு கிளண்டேல் பகுதியில் உள்ள ரேஷன் கடையின் கதவை உடைத்து அரிசி, பருப்பு போன்ற பொருட்களை கரடிநாசம் செய்துள்ளது.
அப்பகுதிக்கு கரடி வராமல் இருக்க பொதுமக்கள் ரேஷன் கடையின் முன்பு இரும்பு தகரம், கற்கள் ஆகியவற்றை கொண்டு தடுப்பு அமைத்துள்ளனர். மேலும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: வால்பாறை அருகே கரடி கடித்ததில் முதியவர் படுகாயம்