ETV Bharat / state

'அப்படிப்போடு' - பழங்குடியின மக்களுடன் பாரம்பரிய நடனமாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - முதல்வர் நடனம்

நீலகிரி மாவட்டம், உதகை செல்லும் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மேள தாளங்களுடன் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். இதேபோல உதகை தமிழ்நாடு மந்து பகுதியில் வரவேற்பளித்த தோடர் பழங்குடியின மக்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நடனமாடினார்.

பழங்குடியின மக்களுடன் பாரம்பரிய நடனமாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

author img

By

Published : May 19, 2022, 10:53 PM IST

நீலகிரி: உதகையில் நாளை நடைபெறவுள்ள 124ஆம் ஆண்டு மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக இன்று கோவையில் இருந்து உதகை புறப்பட்டுச் சென்றார். வழியில் அவருக்கு குன்னூர் பொதுமக்களும், திமுக நிர்வாகிகள் எனப் பலர் லெவல்கிராஸ் பகுதியில் மேளதாளம் முழங்க, பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குன்னூர் வந்த முதலமைச்சர் "தான் முதலமைச்சராகப் பொறுபேற்ற பின் நீலகிரி மாவட்டத்திற்கு வருவது இதுவே முதல்முறை என்றும், மக்களோடு மக்களாய் இருந்து தங்களுக்குப் பல்வேறு உதவிகளை வழங்குவதாகவும்” தெரிவித்தார்.

பழங்குடியின மக்களுடன் பாரம்பரிய நடனமாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதனைத் தொடர்ந்து உதகை சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மந்து என்ற இடத்தில் தோடர் பழங்குடியின மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்பொழுது வாகனத்தில் இருந்து இறங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் , தோடர் பழங்குடியின மக்களுடன் இணைந்து அவர்களின் பாரம்பரிய இசைக்கு ஏற்றபடி நடனமாடினார்.

இதையும் படிங்க: பேரறிவாளன் விடுதலை ஒரு வரலாற்றுப் பிழை - வைத்திலிங்கம் எம்.பி. கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.