ETV Bharat / state

குன்னூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு - The Chief Minister arrived in Coonoor to inaugurate the 124th Flower Show in ootty

உதகையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு குன்னூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உதகையில் 124 ஆவது மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க குன்னூர் வந்தடைந்தார் முதலமைச்சர்

author img

By

Published : May 20, 2022, 7:55 AM IST

நீலகிரி: உதகையில் 124 ஆம் ஆண்டு மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உள்பட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். வேளாண்துறை செயலாளர் சமயமூர்த்தி, தோட்டக்கலை மலை பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தா தேவி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

மலர் கண்காட்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 19) மாலை கோவையில் இருந்து புறப்பட்டு குன்னூர் வந்தடைந்தார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் லெவல்கிராஸ் பகுதியில் மேளாதாளம் முழங்க, பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குன்னூர் வந்த முதலமைச்சர், தான் முதல்வராக பொறுப்பேற்ற பின் நீலகிரி மாவட்டத்திற்கு வருவது இதுவே முதல்முறை என்றும், மக்களோடு மக்களாய் இருந்து தங்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார். மேலும் நாளை மலர் கண்காட்சி துவங்கி வைத்த பின் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு குன்னூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதையும் படிங்க: ரோஜா மலர் கண்காட்சியில் பல்வேறு வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் மலர்கள்!!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.