தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள இந்திரா நகா் பகுதியில் பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் ஆடல் பாடல்களுடன், செண்டை மேளம் முழங்க காளி, சிவன், ஆஞ்சநேயா், கிருஷ்ணன் உட்பட பல்வேறு கடவுள் வேடமிட்டு பொதுமக்கள் முக்கியச் சாலை வழியாக ஊா்வலமாக வந்தனா்.
விழாவில் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
இதையும் படிங்க: தாராவியில் தமிழர்களின் பொங்கல் கொண்டாட்டம்!