ETV Bharat / state

ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் 100 அடி பள்ளத்தில் விழுந்த கார்; 5 பேர் காயம் - குன்னூர் அரசு மருத்துவமனை

உதகை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 5 சுற்றுலாப் பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த கார் நிலை தடுமாறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 10, 2023, 9:56 AM IST

Updated : Apr 10, 2023, 10:08 AM IST

ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் 100 அடி பள்ளத்தில் விழுந்த கார்; 5 பேர் காயம்

நீலகிரி: கூடலூர் பகுதியில் இருந்து மதுராந்தகம் சென்று கொண்டிருந்த கார் உதகை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் பகுதியில் திடீரென நிலை தடுமாறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த பூவனம் (35), சத்தியா (35), செந்தில் (48), சம்பத் (40), அருணகிரி (45) உட்பட ஐந்து சுற்றுலா பயணிகளை தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் 108 வாகன ஓட்டுனர்கள் துரிதமாக செயல்பட்டு பள்ளத்தில் இருந்து மீட்டெடுத்தனர்.

பின்னர் விபத்தில் காயமடைந்த 5 பேரை குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. பின்னர் காயமடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களை துரிதமாக செயல்பட்டு உடனடியாக மீட்டு சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற தனியார் மற்றும் 108 வாகன ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவரை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி முதுமலை வருகை - வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிடுகிறார்!

Last Updated : Apr 10, 2023, 10:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.