நீலகிரி மாவட்டத்தில் குன்னுார் வெலிங்டன் கண்டோன்மென்ட் வாரியத்தில் 25 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேல் குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 6 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாமல் நீண்ட இழுபறியில் இருந்தது.
கடந்த ஓராண்டிற்கு முன், ரூ.50 கோடி மதிப்பீட்டில், பாதாள சாக்கடை திட்டத்திற்கு முதன்மை நிர்வாக அலுவலர் பூஜா பலிச்சா தலைமையில், அன்றைய துணைத் தலைவர் பாரதியார் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து பொருள்கள் கொண்டுவரப்பட்டு ஆரம்ப கட்ட பணி தொடங்கியது. அதைச் செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்த நிலையில், புனேயைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் சின்ன வண்டிச்சோலையில் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கியது. ரூ.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், வெலிங்டன் அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது
இதையும் படிங்க: 3 பேரை கொன்ற சங்கர் யானை பிடிபட்டது
வெலிங்டன் கண்டோன்மென்ட்டில் ரூ.53 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம்! - Cantonment Pedestrain project
நீலகிரி: குன்னுார் வெலிங்டன் கண்டோன்மென்ட்டில் ரூ.53 கோடி மதிப்பீட்டிலான, பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு குழாய் பதிக்கும் பணி தொடங்கியது.