ETV Bharat / state

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிக்கும் பணி தீவிரம்... நீலகிரியில் களை கட்டும் வியாபாரம்! - ட்ரீம் கேக்

Christmas cake: நீலகிரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, முதல்முறையாக குழந்தைகள் விருப்பத்திற்கு ஏற்ப ட்ரீம் கேக்குகள் அறிமுகம் செய்துள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் அதை அதிகம் வாங்கிச் செல்வதாகவும் கேக் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Christmas cake
நீலகிரியில் கேக் தயாரிக்கும் பணி தீவிரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 3:15 PM IST

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிக்கும் பணி தீவிரம்

நீலகிரி: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீலகிரி மாவட்டத்தின் சீதோஷ்ண நிலை ஆங்கிலேயர்களுக்கு மிகவும் ஏதுவாக அமைந்ததால், இப்பகுதியில் தேவாலயங்கள் கட்டப்பட்டு, சுற்றுலாத்தலங்களும் அமைக்கப்பட்டன. மேலும் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளும் இங்கு சிறப்பாக கொண்டாடியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தற்போதுவரை, பழமை மாறாமல் உள்ள தேவாலயங்களில் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகைகள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாளை மறுநாள் டிச.25 கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவது கொண்டாடப்பட உள்ளது. அதற்காக கொண்டாட்டங்கள் தற்போதே பல இடங்களில் துவங்கிவிட்டது. கிறிஸ்துமஸ் என்றாலே நம் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா, கேக், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவைதான். அதிலும் குறிப்பாக கேக் தான் அனைவரின் மனதிலும் முதலில் தோன்றுவது. பண்டிகை அன்று கேக் வாங்கி உண்டு மகிழ்வதுடன், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் கேக் கொடுத்து மகிழ்கின்றனர்.

அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முக்கியத்துவமாக விளங்கும் கேக்குகள் தயாரிக்கும் பணி, தற்போது நீலகிரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் முறையாக குழந்தைகள் விரும்பக் கூடிய ட்ரீம் கேக்குகள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளதாகவும், இந்த வகையான கேக்குகள் கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

குன்னூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் கேக் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ட்ரீம் கேக்குகள் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் கூறுகின்றனர். அதனால் ப்ளம் கேக், பிளாக் பாரஸ்ட், வைட் ஃபாரஸ்ட், சாக்லேட் கேக், வெண்ணிலா கேக், ரெயின்போ கேக்குகள் உள்ளிட்டவை தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தற்போது இந்த கேக் வகைகள் 600 முதல் 1500 வரை விற்பனைக்கு வந்துள்ளதாகவும், குறிப்பாக குழந்தைகள் விரும்பக்கூடிய அவெஞ்சர்ஸ் கேக்குகள், ஸ்பைடர் மேன் கேக்குகள், மயில் மார்க் கேக்குகள், கார் கேக்குகள் போன்றவைகள் வடிவமைக்கப்பட்டு சிறப்பாக விற்பனையாகி வருவதாகவும் கூறுகின்றனர்.

இதுகுறித்து கேக் வேர்ல்ட் மேலாளர் ஜோஸ் பெர்னாண்டஸ் கூறுகையில், "தங்களது நிறுவனம் ஆரம்பித்து 3 ஆண்டுகள் ஆகிறது. தற்போது இந்த கிறிஸ்மஸ் விழாவிற்கு குழந்தைகள் விரும்பக்கூடிய ட்ரீம் கேக்குகள் அறிமுகம் செய்துள்ளோம். இந்த கேக்குகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி செல்கிறார்கள்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெளிநாட்டில் உள்ள அதிநவீன தொழில்நுட்பம் ஏன் இங்கே இல்லை? - அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.