நீலகிரி: கூடலூர் நகராட்சிக்குட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் சேற்றில் சிக்கி 3 நாள்களுக்கு முன்பு குட்டி யானை இறந்தது. வனத்துறையினர் அப்பகுதிக்கு செல்ல முயன்றனர். ஆனால் குட்டி யானையின் தாய் வனத்துறையினரை நெருங்கவிடாமல் விரட்டியது.
யானையை மீட்க முயற்சி
குட்டி யானை இறந்த பகுதி தண்ணீர் செல்லக்கூடிய பகுதியாக இருந்ததால் உடலை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் மிகவும் போராடினர்.
குட்டி யானை மீட்பு
இன்று (ஜூலை. 26) காலை வனத்துறையினர் குட்டி யானையை மீட்க இரண்டு குழுவாக பிரிந்தனர். ஒரு குழுவினர் தாய் யானையை நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்ள, மற்றொரு குழுவினர் புதரில் கிடந்த குட்டி யானையின் உடலை மீட்டனர்.
தற்போது கால்நடை மருத்துவர்கள் குட்டி யானையை உடற்கூராய்வு செய்து புதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்