ETV Bharat / state

படகு ஓட்டுநர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம் - உதகை படகு இல்லத்தில் படகு ஓட்டுநர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

நீலகிரி: படகு இல்லம் மூடபட்ட நிலையில் தங்களுக்கு மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்தி தர நீலகிரி மாவட்ட சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் படகு ஓட்டுநர்கள் ஈடுபட்டனர்.

boat house
boat house
author img

By

Published : Apr 22, 2021, 1:56 AM IST

உதகையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் படகு இல்லமும் ஒன்று. இங்கு ஆண்டிற்கு 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய துடுப்பு படகு, மோட்டார் படகு, மிதிபடகு என 3 வித படகுகள் இயக்கப்படுகின்றன. இதில் மோட்டார் படகு, துடுப்பு படகுகள் அனுபவம் வாய்ந்த படகு ஓட்டுநர்களை கொண்டு இயக்கபடுகின்றன.

இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக படகு இல்லம் மூடப்பட்டது. இதனையடுத்து படகு ஓட்டுநர்களுக்கு வேலையில்லாமல் போனது. கடந்தாண்டு கரோனா ஊரடங்கின்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாகம் 4,500 ரூபாய் மட்டுமே வழங்கியதாக படகு ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

தற்போது படகு இல்லம் மீண்டும் மூடப்பட்ட நிலையில், படகு இல்ல மேலாளர், மண்டல மேலாளர் என எந்த அலுவலர்களும் தங்களை சந்திக்காமல் அலைக்கழித்து வருவதுடன் வாழ்வாதாரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் அலைக்கழிப்பதாகவும் கூறி படகு இல்ல வளாகத்தில் படகு ஓட்டுநர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்க மறுத்த படகு ஓட்டுநர்கள் படகு இல்ல மேலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கூறி தொடர்ந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.