நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த பெரிய பிக்கட்டி பகுதியில் வசித்துவந்தவர் லட்சுமி (65). இவர் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துவந்தார்.
இவர் வீட்டைவிட்டு வெளியில் சென்றபோது செடிகளுக்குள் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று அவரைத் தாக்கி தூக்கி வீசியது. இதில் லட்சுமியின் முதுகு, நெஞ்சு, கை, கால்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று லட்சுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: குன்னூரில் காட்டெருமை தாக்கி ஒருவர் படுகாயம்!