நீலகிரி மாவட்டம், தேவலா பகுதியில் மூச்சுக்குன்னு கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் எழுபதுக்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் ஐந்து தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.
இவர்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க தினமும் வனப்பகுதியை கடந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்துச் செல்ல வேண்டியுள்ளது.
இரவில் இப்பாதையில் நடந்துச் செல்வதென்பது அப்பகுதிமக்களுக்கு கூடுதல் சிரமம். இதனால் அக்கிராம மக்கள், தங்களுக்கு சாலை வசதி அமைத்துத் தருமாறு நீண்ட காலமாக மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துவந்தனர்.
இப்படி பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு சாலை அமைத்து தராததால், தாங்களாகவே சாலை அமைக்க நடவடிக்கை எடுத்து, அப்பணியில் ஈடுபட்டனர்.
இதனையறிந்த பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சுமார் எழுபதுக்கும் மேற்பட்டோர் அப்பகுதி மக்களுடன் இணைந்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு உதவாத தங்களுக்கு மாணவர்கள் உதவுவதால், அவர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க:
சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து நூதன போராட்டம் நடத்திய பெண்கள்